இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு நம் உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் பிரத்தியேகமாக ஒளியேறவிருக்கிறது. உள்ளூர் கலைநிகழ்ச்சி, திரைப்படங்கள், குறும்படம், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்.
‘Lock Up’ Live in concert, இரவு 10.30 (26/10/2019)
Kokkorokko பாடலின் புகழ் Lock-up குழுவினர்களின் இசை நிகழ்ச்சியாகும். இரசிகர்களின் மத்தியில் இன்னும் பிரபலமாக இருக்கும் இவர்களின் பாடல்களை இந்நிகழ்ச்சியில் கண்டு கேட்டு மகிழலாம்.
திருடாதே பாப்பா திருடாதே, மதியம் 1 (27/10/2019)
திருட்டுச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதைக் களம், பிள்ளை வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இத்திரைப்படத்தில் சரேஸ் டி7, ஷாலினி, கபில், ஜெகன்நாதன், யுவராஜ், ஹேமா ஜி, மஞ்சுளா, இர்பான் ஜைனி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
Love in 12 hours, மதியம் 3.30 (27/10/2019)
அர்ஜுன் யாத்ராவு எனும் பெண்னை நீண்ட நாட்களாக காதலிகிறார். ஆனால் யாத்ரா தன்னுடைய திருமணத்திற்காக வெளிநாடு புறப்படுகிறார். அவள் கொடுக்கிற அந்தக் குறுகிய நேரத்தில் அர்ஜுன் தனது காதலை நிரூபிப்பாரா இல்லையா என்பதுதான் கதையாகும்.
வெடிகுண்டு பசங்க, மதியம் 4 (27/10/2019)
மலேசியாவில் பரவலாகவுள்ள வழிப்பறி திருட்டு குற்றச்செயலை மையமாக கொண்ட ‘வெடிகுண்டு பசங்க’ திரைப்படத்தில் டெனிஸ் குமார், ‘விகடகவி’ மகேன், வே. தங்கமணி, டேவிட் அந்தோணி, சீலன் மனோகரன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
அழகிய தீ, மாலை 6.30 (27/10/2019)
சரேஸ், லதா நடிப்பில் ஒரு பெண் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும்போது இந்த சமுதாயம் அவளுக்கு எம்மாதிரியான எதிர்வினைகளை உருவாக்குகின்றது. அது அந்த பெண்ணுக்குள் தீப்பிளம்பாய் வெளிப்படுவதுதான் கதையாகும். லோகன் இயக்கத்தில், சரேஷ் – லதா நடிப்பில் கடந்த 27-ஆம் தேதி மலேசியத் திரையரங்குகளில் இப்படம் வெளியீடு கண்டுள்ளது.
சட்ட, மதியம் 3 (28/10/2019)
பெரிய கலகக்காரனாக மாற வேண்டும் என்று கனவு காணும் ஓர் இளைஞரின் கதையாகும். இத்திரைப்படத்தில் ஹரிதாஸ், செந்தில்குமார் முனியாண்டி, குபேந்திரன், லிங்கேஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் பின்னணி இசையை ஜெய் ராகவேந்திரா கொடுத்திருக்கிறார்.