Home One Line P2 தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி!

தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி!

1169
0
SHARE
Ad

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது

ஒரு சிலருக்கு இது ஏமாற்றத்தைத் தந்தபோதும், சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு இது ஆனந்தமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று இந்த கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன

#TamilSchoolmychoice

இந்நிலையில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு வெளியிட்டுள்ளது. மேலும், பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதி காக்க வேண்டிய இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது