Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம்: குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க கைதானவர்களை விடுதலைச் செய்யுங்கள்!- சார்லஸ் சந்தியாகு

விடுதலைப் புலிகள் விவகாரம்: குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க கைதானவர்களை விடுதலைச் செய்யுங்கள்!- சார்லஸ் சந்தியாகு

939
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த சில வாரங்களாக ஒரு சவாலான தருணங்களை சந்திக்க நேர்ந்துள்ளது. நாட்டை ஆளுவதை விட அரசியல்வாதிகளுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்தும் போக்கு தெளிவாக தென்படுகிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு தெரிவித்துள்ளார்.

மலேசியர்களிடையே மேலும் கருத்து வேறுபாட்டை விதைக்க அரசியலில் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட நாடகமும் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று அவர் மலேசியாகினியில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் சம்பந்தம் இருப்பதாகக் கூறி ஜசெகவின் இரு சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்துள்ளது நகைப்புக்குரியது என்று சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“இதைவிட மோசமான விவகாரம் என்னவென்றால், தீபாவளி இன்னும் மூன்று நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு அரசியல்வாதிகளின் மனைவிகள் கொட்டும் மழையில் புக்கிட் அமானுக்கு வெளியே உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தங்கள் கணவர்களை பண்டிகைக்கு முன்னதாக விடுவிக்கக் கோருகின்றனர்.”

“தங்கள் கணவர்கள் விடுவிக்கப்படாவிட்டால்  அவர்கள் அங்கிருந்து நகர மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஒரு தெளிவான செய்தியும் வெளியிட்டுள்ளார்கள். அம்மூன்று பெண்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அவர்தான் பொறுப்பு என்று எச்சரித்துள்ளனர்.”

“எனது வாதம் எளிதானது. ஒரு திறந்த நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்துங்கள், மேலும் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, காவல் துறையினரும் உள்துறை மந்திரி மொகிதின் யாசினும் 12 பேரைக் காவலில் வைப்பதற்கு தங்களுக்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக பலமுறை கூறவில்லையா?” என்று சார்லஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.