Home One Line P1 பேராக் மந்திரி பெசாரின் காணொளி – நம்பிக்கைக் கூட்டணி உச்ச மன்றத்தில் விவாதிக்கப்படும்

பேராக் மந்திரி பெசாரின் காணொளி – நம்பிக்கைக் கூட்டணி உச்ச மன்றத்தில் விவாதிக்கப்படும்

739
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு சக ஜசெக தலைவர்களைச் சாடியதாகக் கூறப்படும் காணொளி விவகாரம் விரைவில் நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும், பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவருமான சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.

“எனினும், லிம் கிட் சியாங் கூறுவது போல் தற்போதைக்கு தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கவனம் செலுத்துவதுதான் சரியானதாக இருக்கும்” என சைட் சாதிக் மேலும் கூறியிருக்கிறார்.

ஜசெக இஸ்லாத்திற்கும், மலாய்க்காரர்களுக்கும் எதிரானது என்பதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சர்ச்சைக்குரிய அந்தக் காணொளியில் தஞ்சோங் பியாய் பெர்சாத்து வேட்பாளர் கர்மாயினியும் அமர்ந்திருக்கிறார்.

இந்தக் காணொளியால் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக்கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.