Home One Line P1 பினாங்கு: ஒரு கிலோ இந்திய வெங்காயம் 24 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டதை அமைச்சு விசாரிக்கும்!- சைபுடின்

பினாங்கு: ஒரு கிலோ இந்திய வெங்காயம் 24 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டதை அமைச்சு விசாரிக்கும்!- சைபுடின்

714
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: இந்திய வெங்காயம் பினாங்கில் ஒரு கிலோ 24 ரிங்கிட்டுக்கு விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பின் அடிப்படையில், அம்மாநிலத்தில் வெங்காயத்தின் விலை வரம்பு 4.90 ரிங்கிட்டிலிருந்து 24 ரிங்கிட்டாக இருப்பதாக உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார  அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

எனவே பினாங்கில்,  நான் பெற்ற கடைசி அறிக்கையின் அடிப்படையில்,  மலிவான வெங்காய விலை 4.90 ரிங்கிட்டுக்கும், அதிகமாக 24 ரிங்கிட்டுக்கும் விற்கப்படுகிறது”

#TamilSchoolmychoice

இந்த விலையானது மிக  அதிகமானது, மேலும் இந்த விலை வரம்பு மலேசியாவிலேயே மிகவும் அதிகமானதுஎன்று அவர் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

விலை மற்றும் விலை கட்டுப்பாட்டு சட்டங்களின் கீழ் வெங்காயத்தை விற்கும் வளாகத்திற்கு அமைச்சகம் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளதாக சைபுடின் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பினாங்கில் வெங்காயம் விலை அதிகரித்ததற்கான காரணம் குறித்து அமைச்சகம் விசாரித்து வருவதாகவும், ஒரு கிலோ 24 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டது குறித்து அமைச்சு விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2011-இன் கீழ், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் செலவு விலை உட்பட விநியோக ஆதாரம் எங்குள்ளது என்பதை வெளியிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

வெங்காயத்தின் வெவ்வேறு விலை வரம்பில் கண்டிப்பாக விளக்கம் இருக்க வேண்டும் என்று சைபுடின் கூறினார்.

இதற்கிடையில், நாட்டின் முக்கிய ஏற்றுமதியாளரான இந்தியா ஏற்றுமதியை நிறுத்தியிருந்தாலும் நாட்டில் வெங்காயத்தின் இருப்பு போதுமானதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.