Home One Line P1 இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர் துன் மகாதீர் பொறுப்பேற்பு!

இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர் துன் மகாதீர் பொறுப்பேற்பு!

941
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இடைக்கால கல்வி அமைச்சராக பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த கல்வி அமைச்சர் நியமிக்கப்படும் வரை ஜனவரி 3 முதல் டாக்டர் மகாதீர் கல்வி அமைச்சராக செயல்படுவார் என்று அமைச்சரவை கடந்த புதன்கிழமை (ஜனவரி 8) முடிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

20 மாதங்கள் கல்வி அமைச்சராக பணியாற்றி கடந்த ஜனவரி 3-ஆம் தேதியுடன் அப்பதவியிலிருந்து விலகிய டாக்டர் மஸ்லீ மாலிக்கிடமிருந்து டாக்டர் மகாதீர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.