Home One Line P1 “உள்ளூரில் யாரிடமும் கடன்பட்டிருக்க விரும்பவில்லை, ஆகவே, சவுதி அரச குடும்பத்திடம் நன்கொடைப் பெற்றேன்!”- நஜிப்

“உள்ளூரில் யாரிடமும் கடன்பட்டிருக்க விரும்பவில்லை, ஆகவே, சவுதி அரச குடும்பத்திடம் நன்கொடைப் பெற்றேன்!”- நஜிப்

650
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்ளூர் பெருநிறுவனங்களின் நன்கொடையாளர்களுக்கு பதிலாக சவுதி அரச குடும்பத்தினரிடமிருந்து நன்கொடைகளை விரும்பியதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

67 வயதான பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறுகையில், யாரிடமும் கடன்பட்டிருப்பதை விரும்பாததால் பெருநிறுவன நன்கொடைகளை எடுத்துக் கொள்ளாததன் மூலம் தாம் மனநிறைவாக இருப்பதாகக் கூறினார்.

அந்த நேரத்தில் அம்னோ தலைவராக இருந்த நான், மற்ற நன்கொடையாளர்களிடமிருந்து என்னை கடனாளியாக ஆக்கி கொள்ளாமல் இருப்பதற்காக விரும்பினேன். இதன் பொருள் நான் யாரிடமும் கடன்பட்டிருக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

13-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சவுதி அரச குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை எந்தவொரு நிபந்தனையும் அற்றது என்பதை உறுதி செய்வதாக நஜிப் கூறினார்.

சவுதி அரச குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை மாற்றுவதற்கு வசதியாக சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவின் ஆலோசனையைத் தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டில் அம்பேங்க் உடனான தனது வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன என்று நஜிப் கூறினார்.