Home One Line P1 “மூக்கு மூடிகளை வாங்குவதில் மக்கள் பீதியடைய வேண்டாம்!”- சைபுடின் நசுத்தியோன்

“மூக்கு மூடிகளை வாங்குவதில் மக்கள் பீதியடைய வேண்டாம்!”- சைபுடின் நசுத்தியோன்

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் பாதிப்புகளை அடுத்து, மூக்கு மூடிகளை பீதியுடன் வாங்குவதைத் தூண்ட வேண்டாம் என்று பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இம்மாதிரியான போக்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் என்று உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

தற்போது அதிக தேவையை பூர்த்தி செய்ய, மூக்கு மூடிகள் போதுமான அளவில் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சந்தையில் மூக்கு மூடிகளை போதுமான அளவில் வழங்குவதை உறுதி செய்ய அரசாங்கம் பொறுப்பான தரப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது, ஆனால் அதே நேரத்தில், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடனான கடந்த வார சந்திப்பின் போது, மூக்கு மூடிகளின் உற்பத்தி மற்றும் இறக்குமதியை அதிகரிக்குமாறு கூறப்பட்டதாக சைபுடின் தெரிவித்தார்.