Home One Line P1 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு ஒன்று கூடுகிறார்கள்

114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு ஒன்று கூடுகிறார்கள்

737
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இங்குள்ள யாயாசான் அல்புக்காரி கட்டடத்தில் இரவு 10.30 மணிவரை சந்திப்புக் கூட்டம் நடத்திய துன் மகாதீரும், நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களும் அதன் பின்னர் கலைந்து சென்றனர். மீண்டும் நாளைக் காலை 114 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் யாயாசான் அல்புக்காரி கட்டடத்தில் ஒன்று கூடவிருப்பதாக நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

பத்திரிகையாளர்களிடம் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் பேசவில்லை என்றாலும் அன்வார் இப்ராகிம் “114” என முழங்கி விட்டுச் சென்றார்.

“நாங்கள் அமைதியான முறையில் சந்திக்கிறோம். பிரச்சனை எதனையும் நாங்கள் உருவாக்க விரும்பவில்லை.மாமன்னருக்கு தவறுதலான எண்ணிக்கை தரப்பட்டிருக்கின்றன என்பதை எடுத்துக் கூறவே நாங்கள் ஒன்றுகூட விரும்புகிறோம்” என அமானா கட்சியின் துணைத் தலைவர் சாலாஹூடின் அயூப் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனினும் மொகிதின் யாசினின் பதவியேற்பு நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம் என்றும் சாலாஹூடின் கூறியிருக்கிறார்.