
கோலாலம்பூர் – “பின்கதவு அரசாங்கம்” அமைப்பதற்கு எதிராக பொதுமக்களில் சிலர் இன்று சனிக்கிழமை இரவு டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் திரளத் தொடங்கியுள்ளனர்.
சமூக ஊடகங்களின் வழியாக விடுக்கப்பட்ட அழைப்புகளைத் தொடர்ந்து பல இளைய வயது ஆர்ப்பாட்டக்காரர்கள் டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் திரண்டு பின்தகவு வழியாக அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிராக முழக்கள் விடுத்து வருகிறார்கள்.