Home One Line P2 கொவிட்-19: மார்ச் 22, இந்தியாவில் காலை 7 தொடங்கி 14 மணி நேரத்திற்கு மக்கள் வெளியேறத்...

கொவிட்-19: மார்ச் 22, இந்தியாவில் காலை 7 தொடங்கி 14 மணி நேரத்திற்கு மக்கள் வெளியேறத் தடை!

662
0
SHARE
Ad

புது டில்லி: கொரொனாவைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடம் நேற்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) முதற்கொண்டு மக்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

“கொரொனாவைரஸ் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் ஆபத்தில் தள்ளியுள்ளது. இந்த நோயை எதிர்கொண்டு, அதனை குணப்படுத்தும் மருந்து எதையும் அறிவியல் கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு ஊசிகளும் உருவாக்கப்படவில்லை. இத்தகைய சூழல் இயற்கையாகவே நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இனிமேல்தான் ஒவ்வொரு இந்தியரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்று அவர் கூறினர்.

“உலகம் முழுவதும் கொரொனாவைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் அதிகரிக்கும் இந்த அச்சுறுத்தலை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று எண்ணுவது தவறு” என்று அவர் மேலும் கூறினார்.