Home One Line P2 ஜேக் மா அறக்கட்டளை மலேசியா உட்பட பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் உதவி!

ஜேக் மா அறக்கட்டளை மலேசியா உட்பட பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் உதவி!

634
0
SHARE
Ad

பெய்ஜிங்: ஜேக் மா அறக்கட்டளை மற்றும் அலிபாபா அறக்கட்டளை ஆகியவை மலேசியா மற்றும் மூன்று ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை நன்கொடையாக அறிவித்துள்ளன.

ஜேக் மா அறக்கட்டளை 2 மில்லியன் முகக் கவசங்கள், 150,000 மருத்துவ உபகரணங்கள், 200,000 பாதுகாப்பு உடைகள், 20,000 முகமூடிகளையும் அந்தந்த நாடுகளுக்கு அனுப்புவதாக அது கூறியது.

#TamilSchoolmychoice

மலேசியா, இந்தோனிசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கங்களைத் தொடர்புகொண்டு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக அந்த அறக்கட்டளைத் தெரிவித்துள்ளது.

“அண்டை நாடுகளில் கொவிட் -19 வைரஸை எதிர்த்துப் போராடுவதே அறக்கட்டளையின் குறிக்கோள்.”

“எங்கள் ஆசிய அண்டை நாடுகளில் கொவிட் -19 உடன் போராட நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று ஜேக் மா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

“கூடுதல் உதவி மற்ற ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படும்!, ” என்று அது குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவப்படி, 900 சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.