Home One Line P1 பெர்சாத்து பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மார்சுகி நீக்கம்!- வட்டாரம்

பெர்சாத்து பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மார்சுகி நீக்கம்!- வட்டாரம்

461
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மார்சுகி யஹ்யாவை பிரதமர் மொகிதின் யாசின் நீக்கியதாக கூறப்படுகிறது.

பெர்சாத்துவின் தலைவராக இருக்கும் மொகிதின் மார்ச் 18-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் இந்த நடவடிக்கை எடுத்ததாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

“இந்த கடிதம் மார்ச் 18 தேதியிட்டது, ஆனால் அவர் (மார்சுகி) நேற்று (மார்ச் 19) மட்டுமே கடிதத்தைப் பெற்றார்.”

“பெர்சாத்து கட்சி அரசியலமைப்பின் 13.9-வது பிரிவை மொகிதின் மேற்கோள் காட்டி, மார்சுகியின் பொதுச்செயலாளராக பணியாற்றுவதை விளக்கமின்றி நிறுத்தி விட்டார்” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கட்சியின் பொதுச் செயலாளரை நியமனம் செய்வதற்கான அரசியலமைப்பு விவாதிக்கப்பட வேண்டும் மற்றும் தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதால் மார்சுகி பதவி நீக்கம் செல்லுபடியாகுமா என்பது தெளிவாக இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மகாதீருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, நிச்சயமாக இருக்காது என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில், துன் (மகாதீரின்) பதிலைப் பார்க்க வேண்டும்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மொகிதினும் மகாதீரும் ஒரே கட்சியில் இருந்தாலும், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இருவருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்றே கூற வேண்டும்.