Home One Line P1 பெர்சாத்து: மார்சுகிக்கு பதிலாக ஹம்சா சைனுடினின் நியமனத்தை மகாதீர் ஏற்கவில்லை!

பெர்சாத்து: மார்சுகிக்கு பதிலாக ஹம்சா சைனுடினின் நியமனத்தை மகாதீர் ஏற்கவில்லை!

634
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் , கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மார்சுகி யஹ்யா நீக்கம் செய்யப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

“பெர்சாத்து தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து மார்சுகி யஹ்யா பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, பிரதமர் மொகிதின் யாசின், மார்சுகி யஹ்யாவை பெர்சாத்து தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார்.

கட்சியில் மார்சுகியின் சேவையை நிறுத்த, பெர்சாத்து கட்சி அரசியலமைப்பின் பிரிவு 13.9 பயன்படுத்தப்பட்டதாக மொகிதின் மேற்கோள் காட்டியதாக கூறப்படுகிறது.

கடந்த திங்களன்று பெர்சாத்துவின் அவைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் மகாதிர் கூறுகையில், தலைவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்னர் கட்சியுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார்.

மார்சுகிக்கு பதிலாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கட்சியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.