Home One Line P1 கொவிட்-19: வீட்டிலிருந்தபடியே பரிசோதனையை மேற்கொள்ளலாம்!

கொவிட்-19: வீட்டிலிருந்தபடியே பரிசோதனையை மேற்கொள்ளலாம்!

505
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள் சுகாதார நிலையங்களில் சென்று பரிசோதனை செய்து கொள்ளாமல் வீட்டில் இருந்தபடியே பரிசோதனைகளுக்கு தங்களை உட்படுத்தலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு அளித்த அறிக்கையில், தனியார் துறையுடன் இணைந்து, இச்சேவையை அணுக விரும்புவோர், வலைத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் தொடர்புடைய பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், மாதிரி நோக்கங்களுக்காக வீட்டிற்கு எப்போது செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“இருப்பினும், கொவிட்-19 மாதிரி சேவைக்கு தனியார் நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சேவையை புக்டாக் (www.bookdoc.com) போன்ற தனியார் நிறுவனம் வழங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. பந்தாய் பிரீமியர் பட்டோலொஜி செண்டெரியான் பெர்ஹாட், கேபிஜே, குவாலிடாஸ் மருத்துவக் குழு, க்ளெனகிள்ஸ் கோலாலம்பூர், கோலாலம்பூர் பந்தாய் மருத்துவமனை, செராஸ் பந்தாய் மருத்துவமனை, கிள்ளான் பந்தாய் மருத்துவமனை, ஆயர் கெரோ பந்தாய் மருத்துவமனை, இரட்டை கோபுரம் மருத்துவ மையம் மற்றும் டாக்டர்ஆன்கால் ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.

மேல் விபரங்களுக்கு, ஆர்வமுள்ளவர்கள் இந்த நிறுவனங்களின் வலைத்தளங்களைப் பார்வையிடலாம்.