Home One Line P1 கொவிட்19: செராஸில் புதிய தொற்றுக் குழுவினர் கண்டுபிடிப்பு

கொவிட்19: செராஸில் புதிய தொற்றுக் குழுவினர் கண்டுபிடிப்பு

516
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செராஸில் உள்ள ஒரு பேரங்காடியின் பாதுகாப்புக் காவலர்களிடையே கொவிட்19 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 10 பேர் இந்த தொற்றுக்கு நேர்மறையான அறிகுறிகளை காண்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

10 பேர்களில் ஒன்பது பேர் நேபாளத்தைத் சேர்ந்தவர்கள், மீதமுள்ள ஒருவர் மலேசியர் என்றும் அவர் கூறினார்.

இந்த தொற்று குறித்து இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகள் பரிசோதனை செய்யப்பாடு வருவதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அம்பாங்கில் ஒரு கட்டுமானத் தளத்தில் கொவிட்19 நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நெருக்கமான நிலையில் வாழ்ந்தார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அதே போல, பாதுகாப்பு காவலர்கள் சம்பவங்களில், 15 பேர் ஒரே குடியிருப்பில் வசித்து வருவதாக அவர் கூறினார்.

பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர, பேரங்காடியில் உள்ள தொழிலாளர்களும் இந்த நோய்க்கு பரிசோதனை செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

இதுவரை, 436 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் நேர்மறையான முடிவுகளைக் கொண்டுள்ளனர்.