Home One Line P1 வீடற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியில் மே 13 முதல் 21 பேர் வேலையில் இணைவர்

வீடற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியில் மே 13 முதல் 21 பேர் வேலையில் இணைவர்

587
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொழில் வாய்ப்பு மற்றும் நேர்காணல் திட்டத்தின் கீழ், வீடற்று வாழும் 72 பேர் புதிய வேலைக்காக நேர்காணல் செய்யப்பட்டதாகவும், அவர்களில், 21 பேர் மே 13 முதல் பணிப்புரிய மூன்று நிறுவனக்களில் பணிப்புரிய இருப்பதாகவும், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்ட அவர், வீடற்று வாழ்பவர்கள் அனைவரும், எதிர்காலத்தில் மற்ற நிறுவனங்களுடன் இதேபோன்ற செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“கோலாலம்பூர் தொழிலாளர் துறையின் வேலை வாய்ப்பு திட்டம் முதல் கட்டத்தில் 300- க்கும் மேற்பட்ட வீடற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

“இந்த திட்டம் கூட்டரசுப் பிரதசத்தில் வீடற்றவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு முயற்சி. வேலை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக, கியாட் மாரா மையம் மற்றும் கோலாலம்பூர் தொழில்துறை பயிற்சி நிறுவனம் மூலம் வீடற்றவர்களுக்கு திறன் பயிற்சி வாய்ப்புகளையும் இந்த திட்டம் வழங்குகிறது, ” என்று அவர் கூறினார்.