Home நாடு அனுவார் மூசா கெத்தரே தொகுதியில் போட்டியிடமாட்டார்

அனுவார் மூசா கெத்தரே தொகுதியில் போட்டியிடமாட்டார்

614
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கிளாந்தான் மாநிலத்திலுள்ள கெத்தரே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொடர்பு பல்ஊடக அமைச்சருமான அனுவார் மூசாவுக்கு (படம்) மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசி முன்னணி வேட்பாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அம்னோவின் சார்பில் வாய்ப்பு மறுக்கப்படும் 4 அமைச்சர்களில் டான்ஸ்ரீ அனுவார் மூசாவும் ஒருவர்.

மற்றொரு அமைச்சரான ஷாஹிடான் காசிமுக்கும் இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

“ஏற்கனவே நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் பலருக்கு – குறிப்பாக பிரதமருக்கு நெருக்கமானவர்களுக்கு – மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது” என அனுவார் மூசா தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஷாஹிடானும் அனுவார் மூசாவும் சாஹிட் ஹாமிடிக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் என்பது பகிரங்கமான ஒன்று.