Home நாடு ஷாஹிடான் காசிம் : ஆராவ் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பில்லை

ஷாஹிடான் காசிம் : ஆராவ் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பில்லை

372
0
SHARE
Ad
ஷாஹிடான் காசிம்

கோலாலம்பூர் : தேசிய முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை தங்கள் கூட்டணியின் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஆராவ் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான டத்தோஸ்ரீ ஷாஹிடாம் காசிமுக்கு அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

நேற்று அக்டோபர் 31-ஆம் தேதி இரவு விடுத்த ஒரு செய்தியில் இன்று எனது சோகமான நாள் எனக் குறிப்பிட்டு அவரின் தொகுதியில் உள்ள தேர்தல் நடவடிக்கை அறையை மூடியிருக்கிறார் ஷாஹிடான். கடந்த 4 தவணைகளாக ஆராவ் தொகுதியை வெற்றிகரமாக அவர் தற்காத்து வந்திருக்கிறார்.

தன் சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து அம்னோ – தேசிய முன்னணி கொடி, சின்னங்களையும் அவர் அகற்றியிருக்கிறார். கட்சியின் முடிவை அவர் ஏற்றுக் கொள்வாரா அல்லது அந்தத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

1986-இல் முதன் முதலில் ஆராவ் தொகுதியில் வெற்றி பெற்றார். பெர்லிஸ் மந்திரி பெசாராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். 1995 முதல் 2008 வரை ஷாஹிடான் தம்புன் துவாலாங் சட்டமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றியிருக்கிறார்.