Home நாடு பெர்லிஸ் மந்திரி பெசார் மகன் கைது

பெர்லிஸ் மந்திரி பெசார் மகன் கைது

398
0
SHARE
Ad

கங்கார் : பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் சுக்ரி ரம்லியின் மகனும் மேலும் 5 நபர்களும் போலி ஆவணங்களைத் தயாரித்து 6 இலட்சம் ரிங்கிட் ஊழல் புரிந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. அவர்களை விசாரணைக்காக ஒரு நாள் தடுத்து வைக்கும் உத்தரவை கீழமை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றம் பிறப்பித்தது.

6 இலட்சம் ரிங்கிட் பணத்தை மோசடியான முறையில், போலி ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொண்டதற்காக ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மந்திரி பெசார் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.