Home நாடு பெர்லிஸ் மந்திரிபெசார் மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு

பெர்லிஸ் மந்திரிபெசார் மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு

215
0
SHARE
Ad
முகமட் ஷாபிக் முகமட் ஷூக்ரி

கங்கார்: பாஸ் கட்சி ஆட்சி செய்யும் பெர்லிஸ் மாநிலத்தின் மந்திரி பெசார் முகமட் ஷூக்ரி ராம்லியின் மகன் மீது இன்று வியாழக்கிழமை (மே 23) கங்கார் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் 19,505.10 ரிங்கிட்டை போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 35 வயதான முகமட் ஷாபிக் முகமட் ஷூக்ரி குற்றங்களை மறுத்து அவர் விசாரணை கோரினார்.

முகமட் ஃபாரிட் அப்துல் ஹாமிட் என்ற பெயரில் அவர் அந்த போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, 19,505.10 மதிப்புடைய பானங்களை துவாங்கு சைட் சிராஜூடின் என்பவருக்கு விநியோகித்ததாக அரசாங்கத்திடம் இருந்து அந்தப் பணத்தைப் பெற்றிருக்கிறார் என அவர் மீதான குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.