Home உலகம் பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தேர்தல் – ரிஷி சுனாக் அறிவிப்பு

பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தேர்தல் – ரிஷி சுனாக் அறிவிப்பு

402
0
SHARE
Ad
ரிஷி சுனாக்

இலண்டன் : பிரிட்டனில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.

ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டனின் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால், பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியராக ரிஷி சுனாக் திகழ்வார்.

எனினும், மக்கள் ஆதரவு, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை நோக்கி திரும்புவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

2024-இல் உலகம் முழுவதிலும் முக்கிய நாடுகளில் பொதுத் தேர்தல்களும் அதிபர் தேர்தல்களும் நடைபெறுகின்றன. ரஷியாவின் அதிபர் தேர்தல் முடிவடைந்து விளாடிமிர் புடின் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்வரும் ஜூன் 4-ஆம் தேதி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.

நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் ரிஷி சுனாக் அறிவித்தபடி பிரிட்டனின் பொதுத் தேர்தல் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும்.

சிக்கலான சூழ்நிலையில் பிரிட்டன் தனக்கான எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள ஏற்ற தருணம் இதுதான் என ரிஷி சுனாக் அறிவித்தார்.