Home நாடு 2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 2 – நாட்டின் 10-வது பிரதமர் அன்வார்...

2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 2 – நாட்டின் 10-வது பிரதமர் அன்வார் இப்ராகிம்

559
0
SHARE
Ad

(2022-ஆம் ஆண்டில் மலேசியாவில்  ஊடகங்களை ஆக்கிரமித்த 10 மலேசியப் பிரபலங்கள் யார்? எந்தக் காரணங்களால் அவர்களுக்கு அந்தப் பிரபல்யம் கிடைத்தது? அந்த வரிசையில் முதலாவது இடத்தைப் பிடித்தவர் மாமன்னர். ஊடகங்களை ஆக்கிரமித்த இன்னொரு முக்கியப் பிரபலம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். அவருக்கான காரணங்களை விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

பல இன்பகரமான-துன்பகரமான – நினைவுகளுடன் நம்மைக் கடந்து சென்றிருக்கிறது 2022-ஆம் ஆண்டு. இந்த ஆண்டில் ஊடகங்களில் அதிக அளவில் இடம் பெற்ற – விமர்சிக்கப்பட்ட – விவாதிக்கப்பட்ட – 10 மலேசியப் பிரபலங்கள் யார்? ஏன் அவர்களுக்கு இத்தகைய பிரபல்யம் கிடைத்தது? பார்ப்போம்!

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்

அடுத்த பிரதமராகத் தகுதி உடையவன் நான்தான் – ஆனால்  அநியாயமாக எனக்குரிய வாய்ப்பு சதிகளால் மறுக்கப்பட்டது – என 1998-இல் அன்வார் இப்ராஹிம் தொடங்கிய போர் முழக்கம் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்தாண்டு நவம்பர் 24ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

#TamilSchoolmychoice

10ஆம் தேதி பிறந்தவரான அன்வார், நாட்டின் 10ஆவது பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்ற மறுநாள் காலை 10.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் நுழைந்தார். பொதுத்தேர்தலுக்கு முன்பும் – தொகுதி மாறி தம்புன் தொகுதியில் போட்டியிட்டபோதும் – நாடெங்கும் சுற்றி நிகழ்த்திய  பிரச்சாரங்களினாலும் – அடுத்த பிரதமராவாரா என நாடே எதிர்பார்த்த தருணங்களிலும் – மலேசிய ஊடகங்களில் மட்டுமல்லாது – அனைத்துலக ஊடகங்களிலும் நாயகனாகத் திகழ்ந்தவர் அன்வார்.