Home One Line P1 மாநிலங்களுக்கு இடையிலான பயணங்கள் மே 7 முதல் 10 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்!

மாநிலங்களுக்கு இடையிலான பயணங்கள் மே 7 முதல் 10 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்!

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாநிலங்களுக்கிடையிலான பயணங்கள் மே 7 முதல் மே 10 வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை 226,181 பேர் கோலாலம்பூரிலிருந்து தங்கள் கிராமங்களுக்குச் செல்ல அதிகாரம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

நேற்றைய பயணங்கள் சுமூகமாக செயல்பட்டதாக காவல் துறை தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கிளந்தான், ஜோகூர், பேராக்கிலிருந்து 70,538 பேர் இன்று வெள்ளிக்கிழமை மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை மேற்கொள்வர் என்று அவர் கூறினார்.