Home நாடு மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தில் மொகிதினுக்கு எதிராக மகாதீர் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தில் மொகிதினுக்கு எதிராக மகாதீர் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

1243
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் மே 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நடப்புப் பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்.

மகாதீரின் தீர்மானத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து மே 18 நாடாளுமன்றக் கூட்டம் மொகிதின்- மகாதீர் இடையிலான போர்க்களமாக மாறவிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் எனத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

அன்வார் இப்ராகிம் ஏற்கனவே நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நம்பிக்கைக் கூட்டணியால் முன்மொழியப்பட்டிருக்கிறார்.

இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி மிக அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக ஜசெக திகழ்கிறது. எனினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை என அந்தக் கட்சி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி ஒருமித்த கருத்துடன் அன்வார் இப்ராகிமை முன்மொழிந்திருக்கிறது.

இந்நிலையில் ஒருநாள் மட்டுமே நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் வேறு எந்தத் தீர்மானங்களும் சமர்ப்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மொகிதினுக்கு எதிராக மகாதீரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் ஏற்றுக் கொண்டிருப்பது மலேசிய அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது