Home நாடு அனுவார் மூசா, நோ ஓமார் – இருவரும் அம்னோவில் தொடர முடிவு

அனுவார் மூசா, நோ ஓமார் – இருவரும் அம்னோவில் தொடர முடிவு

443
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கிளந்தானில் உள்ள கெத்தெரே தொகுதியில் அம்னோ சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறார் அந்தத் தொகுதியின் நடப்பு உறுப்பினரும் அமைச்சருமான டான்ஸ்ரீ அனுவார் மூசா.

அதைத் தொடர்ந்து அவருக்கு பெரிக்காத்தான் நேஷனல் கட்சி சார்பிலும், பாஸ் கட்சி சார்பிலும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இருந்தாலும் தொடர்ந்து அம்னோவிலேயே நீடிக்க முடிவு செய்திருப்பதாகவும் அம்னோ தலைவரின் முடிவை மதிப்பதாகவும் அனுவார் மூசா கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதே போன்று, தஞ்சோங் காராங் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ நோ ஓமாரும் (படம்) தொடர்ந்து அம்னோவில் நீடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.