Home நாடு துங்கு ரசாலி ஹம்சா போட்டியிடும் கடைசித் தேர்தல்

துங்கு ரசாலி ஹம்சா போட்டியிடும் கடைசித் தேர்தல்

437
0
SHARE
Ad

குவா மூசாங் : கிளந்தானில் உள்ள குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தெங்கு ரசாலி ஹம்சா, தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் இதுதான் என உறுதிப்படுத்தியுள்ளார்.

நீண்ட கால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவர் தெங்கு ரசாலி. கிளந்தான் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்றாலும் தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டியவர். கடந்த 12 தவணைகளாகத் தொடர்ந்து குவா மூசாங் தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கிறார்.

அந்தத் தொகுதியில் உள்ள மக்கள் குறிப்பாக பூர்வ குடியினர் இன்னும் தன் சேவையை விரும்புவதாலேயே அங்கு போட்டியிட்டு வருவதாக தெங்கு ரசாலி கூறினார்.

#TamilSchoolmychoice

குவா மூசாங் அம்னோ தனக்குப் பிறகு தலைமைத்துவத்தை ஏற்பது யார் என்பதில் ஒரு தெளிவான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.