Home நாடு தியான் சுவா பத்து தொகுதியில் சுயேட்சையாகப் போட்டி

தியான் சுவா பத்து தொகுதியில் சுயேட்சையாகப் போட்டி

365
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பத்து தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் தியான் சுவா. 2008, 2013 பொதுத் தேர்தல்களில் பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தியான் சுவா அந்தக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமாவார்.

2018 பொதுத் தேர்தலில் அவர் மீதான வழக்கில் தண்டனை பெற்றிருந்ததன் காரணமாக அவரால் போட்டியிட முடியவில்லை. அவரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட பிரபாகரன் என்ற இளைஞருக்கு பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆதரவு தந்தது. அவரும் வெற்றி பெற்றார். பின்னர் பிகேஆர் கட்சியில் இணைந்தார். அவருக்கு மீண்டும் பத்து தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எனவே, பத்து தொகுதியில் கடுமையான போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய முன்னணி சார்பில் மஇகாவின் வேட்பாளராக கோகிலன் பிள்ளை போட்டியிடுகிறார்.