Home நாடு கோம்பாக் தொகுதியில் அண்ணன் அஸ்மின் அலியை எதிர்த்து தம்பி அஸ்வான் அலி

கோம்பாக் தொகுதியில் அண்ணன் அஸ்மின் அலியை எதிர்த்து தம்பி அஸ்வான் அலி

468
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாகவும் சுவாரசியமான நிகழ்வுகளோடும் மாறிவருகிறது  கோம்பாக் தொகுதி. பிகேஆர் கட்சியின் வழி இந்தத் தொகுதியை வென்ற அஸ்மின் அலி மீண்டும் இங்கே – இந்த முறை பெர்சாத்து- பெரிக்காத்தான் கூட்டணியின் மூலம் வெல்வாரா என்ற ஆர்வம் நாடெங்கும் எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் அஸ்மினின் அரசியல் சிஷ்யனாக அரசியலில் வளர்ந்து இன்று சிலாங்கூரின் மந்திரி பெசாராக உயர்ந்துள்ள அமிருடின் ஷாரி தன் குருவையே எதிர்த்து இங்கு களம் காண்கிறார்.

இதற்கிடையில் அஸ்மின் அலியின் சொந்தத் தம்பியான அஸ்வான் அலி தன் அண்ணனை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அஸ்வான் நடிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கும் ஒரு கலைஞராவார்.