*நவம்பரில் ஆஸ்ட்ரோ வானவில்லில் முதல் ஒளிபரப்பாகும் மேலும் பல உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்
*அரசியல் உரை நிகழ்ச்சி ‘தேர்தல் களம்’ மற்றும் குற்றவியல் ஆவணப்படம் ‘குறி II’
கோலாலம்பூர்: முறையே நவம்பர் 7 மற்றும் 11 தேதிகளில் முதல் ஒளிபரப்பாகும் அரசியல் உரை நிகழ்ச்சி, ‘தேர்தல் களம்’ மற்றும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குற்றவியல் ஆவணப்படம் சீசன் 2, குறி II உள்ளிட்ட மேலும் அதிகமான உள்ளூர் நிகழ்ச்சிகளை டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் இம்மாதம் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம்.
உள்ளூர் திறமையாளர்களான தியாகராஜன் முத்துசாமி மற்றும் வேதகுமாரி வெங்கடேசன் ஆகியோரால் தொகுத்து வழங்கப்படும் தேர்தல் களம் தொகுதிகளின் மக்கள்தொகை, தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னணி, மக்கள் கருத்துக்கள், தற்போதைய அரசியல் சூழல்கள் மற்றும் பலவற்றைச் சித்தரிக்கும்.
11 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர்களான டாக்டர் ஜி. மணிமாறன் மற்றும் டாக்டர் சரஸ்வதி சின்னசாமி; அரசியல் விமர்சகர்களான, டத்தோ அன்புமணி பாலு மற்றும் பாலன் மோசஸ் உட்படப் பல்வேறு விருந்தினர்கள் கலந்துச் சிறப்பிப்பர்.
தேர்தல் களம், நவம்பர் 7, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது. இத்தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு திங்கள் முதல் ஞாயிறு வரை முதல் ஒளிபரப்புக் காணும்.
குற்றவியல் சம்பவங்களை ஆராயும் குறி II
உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளரான லூட்ஸ் கேசன் பால் இயக்கிய மற்றும் அறிமுக உள்ளூர் தொகுப்பாளரான ஹரிதாஸ் இடம்பெறும் குறி II-ஐ வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம். உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட, 13 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடர், மலேசியாவில் நடந்தக் குண்டர் கும்பல், பயங்கரவாதச் சீர்குலைவு, கொலைப், பாலியல் குற்றங்கள், குழந்தைகள் சார்ந்தப் பாலியல் குற்றங்கள் (பேடோஃபில்ஸ்), மந்திரங்கள் மற்றும் சூனியங்கள் சார்ந்தக் குற்றங்கள், வீட்டு அடிமைத்தனம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியப் பல்வேறுக் குற்றங்களை ஆராயும்.
குறி II, நவம்பர் 11, இரவு 8 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது. இத்தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு வெள்ளி முதல் ஒளிபரப்புக் காணும்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.