*நவம்பர் 7, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் உள்ளூர் தமிழ் நாடகத் தொடர் ‘வேங்கையன் மகன்’ முதல் ஒளிபரப்புக் காணுகிறது
கோலாலம்பூர்: நவம்பர் 7, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் வேங்கையன் மகன் எனும் உள்ளூர் தமிழ் நாடகத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். இத்தொடரில் யுவராஜ் கிருஷ்ணசாமி, ஹம்ஸினி பெருமாள், சசி, கோவிந்த் சிங், நித்யாஸ்ரீ மற்றும் தாஷா கிருஷ்ணகுமார் உட்படப் பலப் பிரபல உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.
வேங்கையன் மகன் தொடரை உள்ளூர் இயக்குநர் தீபன் எம். விக்னேஷ் இயக்கியுள்ளார் மற்றும் உள்ளூர் தொகுப்பாளரும் நடிகையுமான ரேவதி மாரியப்பன் தயாரித்துள்ளார். ‘
தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்பாத ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரின் மகனான – ஓர் ஆர்வமுள்ள நகைச்சுவை நடிகரை 22-அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் சித்தரிக்கிறது.
இருப்பினும், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது சட்ட நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியக் கட்டாயத்திற்கு ஆளாகிறார்.
முடிக்கப்படாத சட்ட வழக்குகளை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் மற்றும் அவரது குடும்பத்தின் நிதி நெருக்கடியை அவர் தீர்க்கிறாரா இல்லையா என்பதுதான் கதையின் மையக்கரு.
வேங்கையன் மகன் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.