Home நாடு 15-வது பொதுத் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் நிறைவு! பிரச்சாரப் போர் தொடக்கம்!

15-வது பொதுத் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் நிறைவு! பிரச்சாரப் போர் தொடக்கம்!

441
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கிய 15-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாகல் காலை 10.00 மணியோடு நிறைவடைந்தது.

நாடு முழுமையிலும் சுமுகமாக எல்லாத் தொகுதிகளின் வேட்புமனுத் தாக்கல்களும் நடந்து முடிந்திருக்கின்றன. இப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேட்புமனுத் தாக்கல்களை பரிசீலித்து வருகின்றனர்.

காலை 11.00 மணிக்கு மேல் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பல தொகுதிகளில் பல்முனைப் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் மும்முனைப் போட்டிகள் நடைபெறுகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.