Home நாடு அன்வார் இப்ராகிம் – மொகிதின் யாசின் – இருவரையும் ஈர்த்த கோம்பாக்

அன்வார் இப்ராகிம் – மொகிதின் யாசின் – இருவரையும் ஈர்த்த கோம்பாக்

426
0
SHARE
Ad

கோம்பாக் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்றன.

வேட்புமனுத் தாக்கல் நாளன்று இந்நாள் பிரதமரையும் முன்னாள் பிரதமரையும் ஒரு சேர ஈர்த்த மையமாக கோம்பாக் வேட்புமனுத் தாக்கல் மண்டபம் திகழ்கிறது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சிலாங்கூரைக் கைப்பற்றினால் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் அஸ்மின் அலி கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் உலு கிளாங் தொகுதியில் போட்டியிடுவதுதான் இதற்கான காரணம் என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலில் அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் புக்கிட் அந்தாராபாங்சா சட்டமன்றத்திற்குப் போட்டியிட்ட அஸ்மின் அலி இந்த முறை உலு கிளாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

காலை 8.40 மணியளவில் அவர் பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் கோம்பாக் வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு அஸ்மின் அலி வந்தார்.

அதைத் தொடர்ந்து அன்வார் இப்ராகிமும் காலை 8.50 மணியளவில் கோம்பாக் வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு வருகை தந்தார். அவருடன் சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூரும் வருகை தந்தார்.

நடப்பு சிலாங்கூர் மந்திரி பெசாரான அமிருடின் ஷாரியும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சுங்கை துவா சட்டமன்றத்திற்குப் போட்டியிடுகிறார். இதனால் அனைவரின் பார்வையும் கோம்பாக் வட்டாரத்தின் மீது பதிந்துள்ளது.