Home இந்தியா அண்ணாமலையின் பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது

அண்ணாமலையின் பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது

407
0
SHARE
Ad

இராமேஸ்வரம் : பிரபல சிவன் ஆலயத்தைக் கொண்டுள்ள – இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் இன்று தனது பாதயாத்திரையை தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தொடங்குகிறார்.

அவரின் பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். அமித் ஷா இன்று மதுரை வந்தடைந்தார்.

அண்ணாமலையின் பாதயாத்திரை தமிழக அரசியலில் பாதிப்புகளை – தாக்கங்களை – ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100 நாட்கள் பாதயாத்திரை செல்வதுதான் அண்ணாமலையின் இலக்கு. பாதயாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். “என் மண் என் மக்கள்” என்பது அண்ணாமலை மேற்கொள்ளும் பாதயாத்திரையின் கருப்பொருள் ஆகும்.