Home உலகம் கனடா அமைச்சரவையில் தமிழர் – கரி ஆனந்த சங்கரி – நியமனம்

கனடா அமைச்சரவையில் தமிழர் – கரி ஆனந்த சங்கரி – நியமனம்

666
0
SHARE
Ad
கரி ஆனந்த சங்கரி

ஒட்டாவா : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளதுடன் பழங்குடி இனத்தவருக்கான அமைச்சராக இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவரான கரி ஆனந்த சங்கரி என்பவரை நியமித்துள்ளார்.

கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த், தற்போது கனடா கருவூல வாரியத்தின் தலைவராக பதவியேற்றுள்ளார்.

பிரதமர் ட்ரூடோவுடன் கரி ஆனந்த சங்கரி

அனிதா ஆனந்த் தவிர்த்து, இந்திய வம்சாவளியினர்களான ஹர்ஜிட் சஜ்ஜான் (Harjit Sajjan), கமல் கெரா (Kamal Khera), ரூபி சஹோதா (Ruby Sahota) மற்றும் அரிஃப் விரானி (Arif Virani) ஆகியோருக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களை பிரதமர் ட்ரூடோ வழங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது முதல் முறையாகும்.

இலங்கையின் தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்த சங்கரியின் புதல்வர்தான் கரி ஆனந்தசங்கரி.

அவர் பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் லிபரல் கட்சியின் உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி ஸ்காப்ரோ ராக் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வருகின்றார்.

கரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கனடிய  நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.