Home One Line P1 பெர்சாத்து முன்னாள் பொதுச் செயலாளர் மார்சுகி கட்சியிலிருந்து நீக்கம்

பெர்சாத்து முன்னாள் பொதுச் செயலாளர் மார்சுகி கட்சியிலிருந்து நீக்கம்

551
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டத்தோ மார்சுகி யஹ்யா, பினாங்கு பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

பிரதமரும், பெர்சாத்து தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மார்சுகியை பதவி நீக்கம் செய்து, ஒரு கடிதத்தை வெளியிட்டார்.

“மார்சுகி பினாங்கு பெர்சாத்து முதல்வர் பதவியை உடனடியாக வகிப்பதிலிருந்து நிறுத்தப்படுகிறார்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

“உங்கள் பதவிக்காலம் முழுவதும் உங்கள் பங்களிப்புகளையும் உங்கள் சேவையையும் நான் நன்றி கூறுகிறேன், பாராட்டுகிறேன்.” என்று அவர் கையெழுத்திட்ட கடிதத்தை பார்வையிட்டதாக டி ஸ்டார் கூறியது.

அதே தேதியில் மற்றொரு உச்சமன்றக் குழு உறுப்பினரான அக்ராம்ஷா முஹாமர் உபைடா சனுசியின் நீக்கத்தையும் மொகிதின் குறிப்பிட்டிருந்தார்.

டாக்டர் மகாதீரை ஆதரிப்பவர்களின் பெர்சாத்து உறுப்பினர்களை “சுத்தம் செய்வதற்கான” நடவடிக்கைகளின் வரிசையில் மார்சுகி மற்றும் அக்ராம்ஷாவின் நீக்கம் அமைவதாகக் கூறப்படுகிறது.