ஜெனீவா: உலகில் கொவிட்19 தொற்று பெரிய அளவில் ஆட்கொண்டிருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்த இயலும் என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களில் உலகில் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சேரிப்பகுதியான தாராவி உள்ளிட்ட பகுதிகளை எடுத்துகாட்டாக டெறோஸ் குறிப்பிட்டுள்ளார்.
இப்பகுதிகளில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், அவை தீவிர நடவடிக்கை மூலம் தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கொவிட்19 தொற்று கடந்த டிசம்பரில் சீனாவில் உருவானதில் இருந்து, உலகளவில் குறைந்தது, 555,000 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 196 நாடுகளில் 12.3 மில்லியன் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.