புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 பாதிப்பு ஒரு மில்லியனைக் கடந்தது.
நேற்று ஒரே நாளில் 34,956 பேருக்கு புதிதாக கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளது. 687 பேர் வரை உயரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 1,003,832- ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 25,602- ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கொவிட்19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தற்போது, மீண்டும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகம், டில்லி, கர்நாடகா, குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.