Home One Line P2 சூரரைப் போற்று: ‘காட்டுப்பயலே’ பாடல் முன்னோட்டம் வெளியீடு

சூரரைப் போற்று: ‘காட்டுப்பயலே’ பாடல் முன்னோட்டம் வெளியீடு

1156
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’.

இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் நடந்து முடிந்து தற்போது வெளியாகும் தேதிக்காக காத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ஏப்ரல் 9-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், கொவிட்19 தொற்றுக் காரணமாக இத்திரைப்படம் வெளியாவது  ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து “காட்டுப்பயலே” என்ற பாடலின் ஒரு நிமிட காணொளி நேற்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ( ஜூலை 23) வெளியிடப்பட்டுள்ளது.

கீழே உள்ள இணைப்பில் இப்பாடலைக் காணலாம்: