Home One Line P1 சிலிம் சட்டமன்றத்தில் மகாதீர் முகாம் போட்டி

சிலிம் சட்டமன்றத்தில் மகாதீர் முகாம் போட்டி

512
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் முகாமில் இருந்து வந்த தகவலின்படி சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய மார்சுகி யஹ்யா, அவர்களின் முகாம் தேசிய கூட்டணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தும் என்று கூறினார்.

சிலிம் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி போட்டியிடாது என்று, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் (மகாதீர் முகாம்) சிலிம் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம்.

“நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்ற உறுப்பினர் ஒருவர் அக்கூட்டணி போட்டியிடாது என்று கூறியது” என்று அவர் மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.