கனடிய காவல் துறை (ஆர்.சி.எம்.பி) புள்ளிவிவரங்கள் படி, துரூடோ மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஜனவரி முதல் ஜூலை வரை 130 அச்சுறுத்தல்கள் இருந்ததாகக் கூறியுள்ளது.
இது 2019- ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் செய்யப்பட்ட 100 அச்சுறுத்தல்களிலிருந்து அதிகரித்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
ஆர்.சி.எம்.பி அறிக்கை நாட்டில் கூட்டரசு அதிகாரிகளை குறிவைத்து பல பாதுகாப்பு சம்பவங்களை பின்பற்றி வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதம், துரூடோ வசிக்கும் இருப்பிடத்தின் நுழைவாயிலை மீறியதற்காக ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் புனரமைக்கப்பட்டு வரும் வேளையில் ரைடோ ஹால் தோட்டத்தில் வசித்து வரும் துரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இல்லை.