Home One Line P2 ஏ.ஆர்.ரஹ்மான்: 65 பாடகர்கள் பாடிய பாடல் வெளியீடு

ஏ.ஆர்.ரஹ்மான்: 65 பாடகர்கள் பாடிய பாடல் வெளியீடு

793
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் உருவாக்கப்பட்ட ‘யுனைடெட் சிங்கர்ஸ் நற்பணி மன்றம்’ , பாடகர்கள் சீனிவாஸ், உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒரு பாடலை வெளியிட்டுள்ளது.

இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல், தென் இசைத் துறையைச் சேர்ந்த 65 பாடகர்களால் பாடப்பட்டுள்ளது.

‘டுகேதர் எஸ் வான்’ என்று அழைக்கப்படும் இந்த பாடல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடப்பட்டுள்ளது. எஸ்பி பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சித்ரா, ஷங்கர் மகாதேவன், எஸ்.பி. சைலஜா மற்றும் மனோ ஆகியோரால் பாடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“இந்த கடினமான நேரத்தில் ஒற்றுமையின் தடமான #TogetherAsOne பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி! இந்த ‘தமிழா தமிழா’ மறுஉருவாக்கத்தை மிக முக்கியமான காரணத்திற்காக முன்வைக்க 65 பாடகர்கள் ஒன்றிணைந்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பாடலைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: