Home One Line P2 ஆஸ்ட்ரோ : “விழுதுகள் சமூகத்தின் குரல்” – புதிய நிகழ்ச்சி வானவில்லில் முதல் ஒளிபரப்பு!

ஆஸ்ட்ரோ : “விழுதுகள் சமூகத்தின் குரல்” – புதிய நிகழ்ச்சி வானவில்லில் முதல் ஒளிபரப்பு!

832
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) முதல் ஒளிபரப்பு காணும் “விழுதுகள்: சமூகத்தின் குரல்” எனும் பிரசித்திப் பெற்ற (signature) நேரலை உரை நிகழ்ச்சியை (talkshow) 2020 அக்டோபர் 5 முதல், இரவு 9 மணிக்கு கண்டு களிக்கலாம்.

கருத்தரங்கு (Forum) மனித விருப்பம் (Human Interest), சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME), அறிவு (Knowledge) மற்றும் பொழுதுபோக்கு போன்ற அற்புதமான புதிய அங்கங்களை “புதிய விழுதுகள்: சமூகத்தின் குரல்” நிகழ்ச்சியில் அனைத்து வாடிக்கையாளர்களும் கண்டு களிக்கலாம். அரசியல், சமூக-பொருளாதார விஷயங்கள், தொழில்நுட்பம், அறிவியல், கல்வி, சட்டம், கலாச்சாரம், கலை, மொழி, இலக்கியம், மதம் மற்றும் மருத்துவம் போன்ற தலைப்புகளைக் கொண்ட சமீபத்திய சிக்கல்கள், மனிதர்களின் விருப்பமானக் கதைகள் (human interest stories) மற்றும் தகவல் மற்றும் விவாதங்கள் போன்றவற்றை இப்புதிய அங்கங்கள் சித்தரிக்கும்.

ஶ்ரீ குமரன் முனுசாமி, கபில் கணேசன், ரேவதி மாரியப்பன், அகல்யா மணியம், செல்வகுமாரி செல்வராஜூ மற்றும் குணசீலன் சிவகுமார் போன்ற புகழ் பெற்ற தொகுப்பாளர்களோடு புதிய திறன்சாலிகளான செல்வமலர் செல்வராஜு, இளஞ்செழியன் வேணுகோபால், ஈஸ்வரி பலன்சாமி மற்றும் இளந்தமிழ் மருதை போன்றோரை நடுநிலையாளர்களாக விழுதுகள்: சமூகத்தின் குரல் அறிமுகப்படுத்துகிறது.

#TamilSchoolmychoice

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் விழுதுகள்: சமூகத்தின் குரல் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு, தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ வழியாகவும், மறு ஒளிபரப்பை மறுநாள் காலை 9.30 மணிக்கும் கண்டு களிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கங்களை எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.