பாஸ்டன், ஏப்ரல் 16 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இன்று மாராத்தான் போட்டி நடந்தது. அப்போட்டி முடியும் நேரத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதனால் அதிர்ச்சியில் மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஒடினர்.
அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் நகரின் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள் மேலும் 141பேர்வரை காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தவிர 17 பேர் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.