Home இந்தியா புதிய அலுவலகத்தில் குடியேறினார் நரேந்திர மோடி

புதிய அலுவலகத்தில் குடியேறினார் நரேந்திர மோடி

640
0
SHARE
Ad

modiஅகமதாபாத், ஏப்ரல் 16- குஜராத் தலைமை செயலகத்தின் இடநெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு முதல் மந்திரியின் அமைச்சகம் தொடர்பான துறைகளுக்கென தனியாக ஓர் அலுவலகத்தை கட்ட முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, முதல் மந்திரி, இதர மந்திரிகள், முதன்மை செயலாளர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பணியாளர்கள் தங்களது பணிகளை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும் வகையில் ரூ.150 கோடி செலவில் புதிய கட்டிடம் உருவானது.

இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தலைமை செயலகத்தில் பணியாற்றும் நான்காம் நிலை ஊழியர் சவ்ஜி டமோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

#TamilSchoolmychoice

தனக்கென்று ஒதுக்கப்பட்ட புதிய அறையில் அமர்ந்து முதல் மந்திரி நரேந்திர மோடி நேற்றைய பணிகளை கவனித்தார்.