Home One Line P1 எனது 10 விழுக்காட்டு ஓய்வூதியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்!

எனது 10 விழுக்காட்டு ஓய்வூதியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்!

530
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தனது ஓய்வூதியத்தை 10 விழுக்காடு குறைக்க தயாராக இருப்பதாகவும், அது வருமான ஆதாரத்தை இழந்தவர்களுக்கு உதவ பயன்படட்டும் என்று கூறியுள்ளார்.

கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து அதிக வருமானம் உள்ளவர்கள் 10 விழுக்காடு சம்பளக் குறைப்புக்கான அவர் முன்வைத்த திட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“எனது ஓய்வூதியத்தில் 10 விழுக்காட்டைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். அது வருமான ஆதாரத்தை முழுவதுமாக இழந்தவர்களின் சுமையை குறைக்க பயன்படுகிறது.

#TamilSchoolmychoice

“நான் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது எனது வாழ்க்கை சிறிதும் பாதிக்கப்படவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று அவர் முகநூலில் வெளியிட்ட காணொலியில் கூறினார்.

அவர் பிரதமராக இருந்த போது, தனக்கும், அமைச்சர்களுக்கும், துணை அமைச்சர்களுக்கும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் 10 விழுக்காடு ஊதியக் குறைப்பை முன்மொழியப்படுவது இயல்பு என்று கூறினார்.

“இப்போது, ​​சம்பளம் இதற்கு முன்பபைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. பலர் வருமானத்தை இழந்தாலும், அரசாங்கத்தில் ஊதியம் பெறுபவர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களில் கூட சம்பளத்திற்கு பஞ்சமில்லை.

“பாதுகாப்பற்றவர்களுக்கு கொடுக்க பாதுகாப்பாக இருப்பவர்களின் 10 விழுக்கட்டை குறைப்பது நியாயமானது,” என்று அவர் கூறினார்.