Home One Line P2 ஆஸ்ட்ரோவின் “பிறவி சித்தம்” – புதிய உள்ளூர் தமிழ் ஆவணப் படம்

ஆஸ்ட்ரோவின் “பிறவி சித்தம்” – புதிய உள்ளூர் தமிழ் ஆவணப் படம்

956
0
SHARE
Ad

கோலாலம்பூர் : “பிறவி சித்தம்’, என்ற புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படம் ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்பு காணுகிறது. இந்த ஆவணப்படம் உள்ளூர் ‘சித்தர்களின்’ வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது

இந்து மதத்தின் விசித்திரமான மற்றும் ஆன்மீக அம்சங்களைக் கொண்ட, குறிப்பாக உள்ளூர் சித்தர்களைச் சித்தரிக்கும் “பிறவி சித்தம்” எனும் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படத்தின் முதல் ஒளிபரப்பை சனிக்கிழமை, டிசம்பர் 12, இரவு 9 மணி முதல் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் வானவில் அலைவரிசையில் கண்டு மகிழலாம்.

8-அத்தியாயங்களைக் கொண்ட புதிய வகையான இந்த உள்ளூர் ஆவணப்படம், இந்து மதத்தின் சில சுவாரசியமான மற்றும் குறைவாக அறியப்பட்ட மர்மங்களை வெளிக்கொணர்கிறது.

#TamilSchoolmychoice

உள்ளூர் இயக்குநர் சிலியன் எஸ் பெருமாள் கைவண்ணத்தில் மலர்ந்தப் பிறவி சித்தம் ஆவணப்படத்தை ‘அழகிய தீ’ திரைப்படத்திலிருந்து ,‘யாரோ இவள் யாரோ’, ‘உருகுது ஒரு மனம்’ மற்றும் ‘அதையும் தாண்டி #புனிதமானது’ திரைப்படத்திலிருந்து ‘கனவே’ எனும் பிரபலமான பாடல்களின் பாடலாசிரியர், அருசெல்வன் செல்வசாமி முதல் பாகத்தில் தொகுத்து வழங்குகிறார்.

பின்பு, இரண்டாம் பாகத்தில் வானொலி அறிவிப்பாளர் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் திரைக்கதை (ஸ்கிரிப்ட்) எழுத்தாளர், மீனா குமாரி கடியன்பன் இந்த ஆவணப்படத்தைத் தொகுத்து வழங்குகிறார்.

மலேசியாவில் உள்ள சித்தர்கள், அவர்களின் வரலாறு மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கான அவர்களின் பங்களிப்புகள் ஆகியவற்றை பிறவி சித்தம் சித்தரிக்கும். அதுமட்டும்மின்றி, பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகள், யோகாசனம், சுவாசப் பயிற்சிகள், சைவ உணவு முறைகள் மற்றும் அதன் நன்மைகள், மற்றும் ‘ஜீவ சமாதி’ அல்லது ‘முக்தி நிலையைக்’ கொண்ட எட்டுத் தளங்கள் ஆகியவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும்.

அவை யாதெனில், பேராக்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமம் மற்றும் காசிவாசி கண்டைய சுவாமி சமாதி; பினாங்கில் அமைந்துள்ள சித்தர் பழனிசாமி தியான மையம், பிரம்ம ஸ்ரீ சுவாமி சரஹன பவனந்த சமாதி, ஸ்ரீ ரங்கநாத சுவாமி மதாலயம் மற்றும் காந்தசாமி கோயில்; மற்றும் கெடாவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவபித்து குருமாதா (அம்மா) மற்றும் சுவாமி சந்தனந்த சித்தர்.

பிறவி சித்தம் ஆவணப்படத்தின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) கண்டு களிக்கலாம் அல்லது எப்போதும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.