இந்து மதத்தின் விசித்திரமான மற்றும் ஆன்மீக அம்சங்களைக் கொண்ட, குறிப்பாக உள்ளூர் சித்தர்களைச் சித்தரிக்கும் “பிறவி சித்தம்” எனும் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படத்தின் முதல் ஒளிபரப்பை சனிக்கிழமை, டிசம்பர் 12, இரவு 9 மணி முதல் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் வானவில் அலைவரிசையில் கண்டு மகிழலாம்.
உள்ளூர் இயக்குநர் சிலியன் எஸ் பெருமாள் கைவண்ணத்தில் மலர்ந்தப் பிறவி சித்தம் ஆவணப்படத்தை ‘அழகிய தீ’ திரைப்படத்திலிருந்து ,‘யாரோ இவள் யாரோ’, ‘உருகுது ஒரு மனம்’ மற்றும் ‘அதையும் தாண்டி #புனிதமானது’ திரைப்படத்திலிருந்து ‘கனவே’ எனும் பிரபலமான பாடல்களின் பாடலாசிரியர், அருசெல்வன் செல்வசாமி முதல் பாகத்தில் தொகுத்து வழங்குகிறார்.
மலேசியாவில் உள்ள சித்தர்கள், அவர்களின் வரலாறு மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கான அவர்களின் பங்களிப்புகள் ஆகியவற்றை பிறவி சித்தம் சித்தரிக்கும். அதுமட்டும்மின்றி, பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகள், யோகாசனம், சுவாசப் பயிற்சிகள், சைவ உணவு முறைகள் மற்றும் அதன் நன்மைகள், மற்றும் ‘ஜீவ சமாதி’ அல்லது ‘முக்தி நிலையைக்’ கொண்ட எட்டுத் தளங்கள் ஆகியவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும்.
பிறவி சித்தம் ஆவணப்படத்தின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) கண்டு களிக்கலாம் அல்லது எப்போதும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.