Home உலகம் வடகொரியா எல்லையில் அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்து

வடகொரியா எல்லையில் அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்து

513
0
SHARE
Ad

US-Heli(C)சியோல், ஏப்ரல் 17 – கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதட்டம் நீடித்து வரும் நிலையில் வடகொரியாவின் எல்லை அருகே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத விவகாரத்தில் ஐ.நா. வின் பொருளாதாரத் தடையை எதிர்நோக்கியிருக்கிறது வடகொரியா.

அண்டை நாடான தென்கொரியாவோ அமெரிக்காவுடன் இணைந்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக கூட்டு போர் பயிற்சி நடவடிக்கைகளில் ்ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா, எந்த நேரத்திலும் தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது போர் தொடுப்போம் என்று அறிவிப்பு உக்கிர நிலையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தென்கொரியா- அமெரிக்காவின் கூட்டுப் படைகள்இன்றும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தன. அப்போது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வடகொரியா எல்லையில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதில் இருந்த 16 பேரும் உடனடியாக பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மூன்று பேர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். வடகொரியாவின் தாக்குதலால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்குமோ என்ற சந்தேகத்தால் அங்கு பரபரப்பும் பதட்டமுமான சூழல் நிலவுகிறது.