Home உலகம் போஸ்டன் நகரை நாளை பார்வையிட செல்கிறார் ஒபாமா

போஸ்டன் நகரை நாளை பார்வையிட செல்கிறார் ஒபாமா

346
0
SHARE
Ad

obama-angryஅமெரிக்கா, ஏப்ரல் 17- அமெரிக்காவின் போஸ்டன் நகரில் நடைபெற்ற மரதன் போட்டியில் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் பயங்கரமாக வெடித்தன.

இத்தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே, இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நீதியின் முன்னர் நிறுத்துவோம் என்று ஒபாமா உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பொஸ்டன் நகருக்கு நாளை ஒபாமா பார்வையிட செல்கிறார். அப்போது மதநல்லிணக்க கூட்டத்திலும் கலந்து கொள்ளவார் என்று மாசாசூசெட்ஸ் மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.